Aran Sei

காலாவதியான தடுப்பு மருந்துகளை வழங்கிய இஸ்ரேல் அரசு – பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்த பாலஸ்தீன அரசு

ஸ்ரேல்- பாலஸ்தீன் அரசுகளுக்கு இடையேயான, தடுப்பு மருந்து பரிமாற்ற ஒப்பந்தத்தை, பாலஸ்தீன அரசு ரத்து செய்து அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் அரசு 1 மில்லியன் தடுப்பு மருந்துகளை அளிக்கும் என்றும், அதற்கு மாற்றாக பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் பாலஸ்தீன் அரசு, 1 மில்லியன் தடுப்பு மருந்தை வழங்கவேண்டுமென்று நேற்றைய தினம் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூத தேசியவாதிகளின் ஜெருசலேம் பேரணிக்கு இஸ்ரேல் அனுமதி : பாலஸ்தீனத்தை மீண்டும் சூழுகிறதா போர்மேகம்?

இந்நிலையில், இஸ்ரேல் அரசு அனுப்பிவைத்த தடுப்புமருந்துகள் விரைவில் காலாவதியாகும் நிலையில் உள்ளதாகவும், அதனால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக, பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்திருந்த இஸ்ரேல் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாலஸ்தீனுக்கு தங்களிடம் உள்ள சுமார் ஒரு மில்லியன் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்துகளை கொடுப்பதாகவும், உடனடியாக பாலஸ்தீனிய மக்களுக்கு அவை பயன்படட்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்ததார்

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலில் இருந்து முதல் தொகுப்பாக 90,000 டோஸ்கள் பாலஸ்தீனுக்கு வந்த நிலையில் அவை, இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால் ,பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக ​​பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் “விரைவில் காலவாதியாகும்” என்று குறிப்பிட்டிருந்தாகவும் தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்