Aran Sei

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டுமெனக் கோரி பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ராயட்-அல்-மாலிகி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் வன்முறை குறித்து விசாரணை நடத்த தகவல்களையம், ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். பாலஸ்தீனத்தின் ஷேக் ஜாரஹ் மற்றும் காசாப்பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதஉரிமைக்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் குறித்து தெரிவித்துள்ளோம்” என்று ராயட்-அல்-மாலிகி கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

கடந்த மே 10 லிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 218 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் மட்டும் 2 குழந்தைகள் உட்பட 63 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று,இஸ்ரேலியப் படையினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே நாளில் 42 பாலஸ்தீனர்கள் பலி – வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ஐநா வேண்டுகோள்

மேலும், பாலஸ்தீனத்தின் மேற்கு பக்கத்தில் இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 4 போராட்டக்காரராகளையும் இஸ்ரேலியப் படையினர் கொன்றுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலியப் படையினரின் தாக்குதல்குறித்து தெரிவித்துள்ள சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர்,” இந்த தாக்குதல் தவறான பாதைக்கு வழிவகுக்கும், அதாவது நங்கள் உழைத்து வரும் நீடித்த அமைதிக்கான பாதைக்கு எதிராக அமையும்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலியப்படையினர் முதன்மை ஆய்வகப்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக கொரோனா பரிசோதனை செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்