இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமான இந்துக்களின் கோவில்களைப் பராமரிப்பதற்காக முதன்முறையாக இந்து தலைவர்களின் குழுவை அமைத்துள்ளதாக நேற்று (டிசம்பர் 29) பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாகிஸ்தான் சீக்கிய குருத்துவாரா நிர்வாகக் குழுவைப் போலவே கிருஷ்ணா சர்மா என்பவர் தலைமையில் பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழுவைப் பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம் அமைத்துள்ளது.
“இந்து சமூகத்தின் கோரிக்கைக்கு இணங்கி அதற்காக ஒரு குழுவை அமைத்து பாகிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது” என்று அக்குழுவின் தலைவர் கிருஷ்ணா சர்மா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழுவின் தொடக்கக் கூட்டம் மத விவகார அமைச்சர் பிர் நூர்-உல்-ஹக் காத்ரி தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதில், பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மதச் சொத்துக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் ஒரு சட்டப்பூர்வமான ஒரு வாரியம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாத மக்களின் பிரச்சனைகள் முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கப்பட்டு வருவதாகவும் மத விவகார அமைச்சர் பிர் நூர்-உல்-ஹக் காத்ரி கூறியுள்ளார்.
“நமக்குள் மத மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தபோதிலும், சகிப்புத்தன்மை மற்றும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதுதான் மனிதநேயம். ஆனால் பாகிஸ்தானில் மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் மோதலை உருவாக்கச் சில தீய சக்திகளை விரும்புகின்றன” என்று மத விவகார அமைச்சர் பிர் நூர்-உல்-ஹக் காத்ரி கூறியுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.