Aran Sei

‘மத துறவிகளுக்கு கூட செலுத்தப்படும் தடுப்பு மருந்து, ஏன் எங்களுக்கு இல்லை’ – பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் பிரதமருக்கு கடிதம்

தினெட்டு வயதிற்கு மேலுள்ள இந்திய குடிமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் வசித்து வரும் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு ஆதார் அட்டைகள் இல்லாததால் தடுப்பு மருந்து மறுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியிடம் தங்கள் பயண ஆவணங்களின் அடிப்படையில் தடுப்பு மருந்து செலுத்துமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டமானது நாட்டிலேயே பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி. அவற்றுள் சுமார் 21 குடியிறுப்புகளில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது.

தடுப்பு முகாம்களில் உள்ள 24% ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று – மனிதநேய அடிப்படையில் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுகோள்

மொத்தமாக, ஜோத்பூர், ஜெய்ப்பூர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை இல்லாது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் வசித்து வருகின்றனர்.

அவர்களின் உரிமைகளுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக் சீமந்த் சங்கதனின் தலைவர் இந்து சிங் சோதா, அவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களுக்கு பயண ஆவணங்கள் உள்ளன. அவர்களுக்கு விசாவும் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியும் உண்டு. இந்த ஆவணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தடுப்பு மருந்துகளை செலுத்துங்கள். நாடோடிகளும், மத துறவிகளும், வீடற்றவர்களும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளோருக்கான அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், தொற்றால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக கூடிய இவர்கள் சேர்க்கப்படவில்லை.” என்று  தெரிவித்துள்ளார்.

Source; newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்