Aran Sei

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது’ – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

னநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை அளிக்கப்படும் குற்றவாளிக்கு, அத்தண்டனைக்கான காரணத்தை புரிந்துக்கொள்ளும் மனநிலை இல்லையென்றால், வழங்கப்பட்ட அந்த நீதி, முழுமை பெறாது என்று அந்த உத்தரவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

நேற்று (பிப்பிரவரி 10), பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மன்சூர் அஹமத் மாலிக் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு, மனநலம் பாதிக்கப்பட்ட மரண தண்டனை கைதிகளான கனீசன் பீபி, இம்தாத் அலி மற்றும் குலாம் அப்பாஸ் ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்

மனநலம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளைக் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், தங்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரியிருந்தனர்.

கனீசன் பீபி மற்றும் இம்தாத் அலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், மற்றொரு மரண தண்டனை கைதியான குலாம் அப்பாஸ் சார்பாக, பாகிஸ்தான் குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளி, அவருக்கு நிறைவேற்றப்படும் தண்டனைக்கு பின்னால் உள்ள காரணத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், அந்த மரண தண்டனையை நிறைவேற்றுவது, வழங்கப்பட்ட நீதிக்கு முழுமை பெற்றுத்தராது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

மேலும், இம்மூன்று குற்றவாளிகளையும் சிறையில் இருந்து லாகூரில் உள்ள பஞ்சாப் மனநல மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை மற்றும் அவர்களுடைய மறுவாழ்வுக்கு வழிவகை செய்யும்படியும் நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இத்தீர்பை சுட்டிக்காட்டி, மனநோய் பாதிக்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து விலக்கு பெற முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

“இந்த தண்டனை விலக்கு பெற, மனநல நிபுணர்களைக் கொண்ட ஒரு மருத்துவக் குழு, அக்குற்றவாளிகளுக்கு ஒரு முழுமையான பரிசோதனை செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும். அதில், தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்துகொள்ளும்படியான மனநிலையில் அந்த கைதி இல்லை என்று சான்றளிக்க வேண்டும்.” என்று அத்தீர்ப்பில் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.

நீ தீவிரவாதியா என்று மட்டுமே கேட்டனர்

மனநல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, இந்த நடைமுறை தொடர்பாக பயிற்சி அளிக்கவும், அதற்கு தேவையான உயர்தர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தவும், எவையெவை எல்லாம் மனநோய்கள் என்பதற்கான சரியான வரையறைகளை உருவாக்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அமைப்பான, ‘ஜஸ்டிஸ் ப்ராஜெக்ட் பாகிஸ்தான்’ (Justice Project Pakistan) என்ற அமைப்பு, இத்தீர்ப்பை வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் எங்களுடைய பத்தாண்டு காலத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்