Aran Sei

பாகிஸ்தானில் தகர்க்கப்பட்ட இந்து கோவில் : கடும் நடவடிக்கை எடுத்த அரசு

Image Credits: DW

ரு தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்கள் தலைமையிலான கும்பல் இந்து கோவிலுக்குத் தீ வைத்து இடித்ததை அடுத்து ஒரே இரவில் நடந்த சோதனையில் 14 பேரைப் பாகிஸ்தான் காவலர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை, வடமேற்கு நகரமான கரக்கில் கோவில் தகர்க்கப்பட்டுள்ளது. இதனை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை இந்து சமூகத்தினர் கண்டித்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

உள்ளூர் காவலர்கள் ஒரே இரவில் நடத்த சோதனையில் 14 பேரைக் கைது செய்ததாகவும், கோயிலை இடிக்கத் தூண்டிய நபர்களை கைது செய்ய மேலும் சோதனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோயிலைப் புதுப்பிக்க இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதையடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சாட்சிகள் கூறியதன்படி, இந்தக் கும்பல்  பாகிஸ்தானில் உள்ள ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளர்களால் வழிநடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

பாகிஸ்தானின் மத விவகார துறை அமைச்சர் நூருல் ஹக் காத்ரி கோயில் மீதான தாக்குதலை “நல்லிணக்கத்திற்கு எதிரான சதி” என்று கூறியுள்ளார். “சிறுபான்மை மதக் குழுக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை” என்றும், “சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது நமது மத, அரசியலமைப்பு, தார்மீக மற்றும் தேசிய பொறுப்பு” என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1000 கோடி மதிப்பீட்டில் இந்து கோயில் : இஸ்லாமாபாத்தில் கட்ட அனுமதித்த பாகிஸ்தான் அரசு

மதகுருக்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இஸ்லாமாபாத்தில் ஒரு புதிய கோயில் கட்ட இந்து சமூகத்தினருக்கு அரசு அனுமதி வழங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், இந்தத் துயர சம்பவம் குறித்து பாகிஸ்தான் தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார் என்று லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஜனவரி 5-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்