Aran Sei

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – கடுமையான நடவடிக்கை எடுக்க பாஜக அரசு வலியுறுத்தல்

Image Credits: DW

பாகிஸ்தான் சிறுபான்மையினர் மீது “தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு” எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசு பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதனன்று, பாகிஸ்தானின் கரக் மாவட்டத்தில் உள்ள கைபர்-பக்துன்க்வா பகுதியில் ஒரு கோவிலுக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு இந்தியா பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்,  “பாகிஸ்தானில் உள்ள கோவில் நாசம் செய்யப்படுவது இது முதன்முறையல்ல. கோவிலை சேதம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளதாக தி டெலிகிராஃப் தெரிவிக்கிறது.

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

இது தொடர்பான விசாரணை குறித்த தகவல்களை, இந்திய அரசிடம் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், “பாகிஸ்தான் அரசு, அதன் சிறுபான்மையினரின் மத மற்றும் கலாச்சார உரிமைகள் உட்பட, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனவும் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டதென தி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கோவிலுக்கு தீ வைக்கப்பட்ட அதே நாளில், மத்திய பிரதேசத்தில் உள்ள மசூதி ஒன்றை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் இடிக்க முயற்சி செய்ததாக டெலிகிராஃப்  செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்த போது மசூதியை இடிக்க முயற்சி செய்துள்ளனர் என்றும் ஆனால், நரேந்திர மோடி அரசு இது குறித்து எந்த அறிக்கையோ, எச்சரிக்கையோ வெளியிடவில்லை என்பதையும் டெலிகிராஃப்  சுட்டிக்காட்டியுள்ளது.

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ள மசூதியை அகற்ற வேண்டும் – மதுரா நீதிமன்றத்தில் மனு

இந்த இரண்டு நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சிறுபான்மையினர் நடத்தப்படும் முறையில் உள்ள வித்தியாசங்களை இந்த இரண்டு நிகழ்வுகளும் அப்பட்டமாக காட்டுவதாக டெலிகிராஃப் கூறுகின்றது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்