Aran Sei

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி – பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான்

ன்று (ஏப்ரல் 10) அதிகாலை நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பதவியை இழந்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை பேசி தீர்க்கலாம் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்ததில்லை. நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்ததன் மூலம் பதவியை இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான். மேலும், எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை.

இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் நள்ளிரவில் நாடாளுமன்றம்  கூடியது.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை

அப்போது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினர். அதில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார்.

அதாவது, 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற அவையில், இம்ரான் கானின் ஆட்சி தொடர 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

“நீடித்த அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ” – மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

இம்ரான் கான் பதவி இழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : The Hindu

நான் வரைந்த ஓவியத்தைத்தான் A.R.Rahman பகிர்ந்தார். ஓவியர் சந்தோஷ் நாராயணின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்