Aran Sei

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட இரண்டாண்டு நிறைவு – ஊடகவியலாளர்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்காத இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

ம்மு – காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வாகா எல்லை வழியாக சர்வதேச  ஊடகவியலாளர்களை அனுமதிக்க இந்தியா மறுத்து வருவதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர்கள் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவில் ஊடக சுதந்திரம் என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.

குடியுரிமை அதிகாரிகளிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வரவில்லை. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக வாகா எல்லை அடைக்கப்பட்டுள்ளது என்றும்,  அரசு உயரதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் எல்லை தாண்டி பயணிப்பதற்கு இந்தியா அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ”ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் சுதந்திரமான பேச்சு மற்றும் சுயாதீன ஊடகத்திற்கான இடம் சுருக்கவதற்கான மற்றொரு அறிகுறி; இது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்து மாற்றப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்