Aran Sei

மூச்சு விட தவிக்கும் இந்தியாவைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தான் மக்கள் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடால் தவித்து வரும் சூழலில், இந்தியாவுக்கு உதவுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அந்நாட்டு மக்கள் சமூக வலைதளத்தின் வழியே கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், கொரோனா நோய்த்தொற்றால் 3.46 லட்சம் பேர் பாதிப்படைந்திருப்பதாகவும், 2600 பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றால் 9.94 லட்சம் மக்கள் பாதிப்படைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பாகிஸ்தான் மோதல் அதிகரித்துள்ளது – அமெரிக்கா

இந்தச் சூழலில், இந்தியாவின் எதிரி நாடு என்று கூறப்படும் பாகிஸ்தானில் இருந்து, இந்திய மக்களைக் காப்பாற்றக் கோரி குரல்கள் வலுத்து வருகின்றன.

 

பாகிஸ்தான் மக்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ”இம்ரான் கானினுடைய அரசாங்கம் இந்தியாவுடன் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, இந்தக் கடினமான காலத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ”இந்தியாவுக்கு ஆக்சிஜன் தேவை, எங்களால் மூச்சுவிட இயலவில்லை” என்கிற ஹேஷ்டேக் மூலமாகவும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ”சீக்கிரம் நலம் பெறு இந்தியா. பாகிஸ்தான் உன்னுடன் இருக்கிறது. நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்லலாம்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவில் மக்கள் கொரோனா நோய்த்தொற்றால் அவதிப்படும் காணொளிகளைப் பகிர்ந்துள்ள பாகிஸ்தான் மக்கள், தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ”யாரும் இவ்வாறு துன்பபடக் கூடாது. மனிதநேயமே உயர்ந்தது” என்றும் “நமக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் சரி, மனிதநேய அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றே, இந்தியாவில் வாழும் மக்கள்மீது அல்லாஹ் கருணைக் கொள்ள, பிரார்த்திக்கிறோம்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

 

மேலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் இதி அறக்கட்டளை, இந்தியாவுக்கு 50 ஆம்புலன்ஸ்களும், மற்ற அடிப்படை உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக, கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம், எழுதியுள்ளது.

அது மட்டுமின்றி, ”அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட குழுவை இந்தியாவுக்கு அனுப்புகிறோம்” எனவும்  ”எங்கள் குழுவுக்குத் தேவையான எரிபொருள், உணவு மற்றும் பிற தேவையான வசதிகளை நாங்கள் வழங்குகிறோம். உங்களிடம் இருந்து எந்த உதவியும் கோரவில்லை” எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதி அறக்கட்டளை எழுதிய கடிதத்திற்கு இந்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை.

”கருத்துரிமையை மறுக்க, இது இந்தியா அல்ல”: பாகிஸ்தான் நீதிபதி கருத்து; நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் – ப.சிதம்பரம்

மேலும், பாகிஸ்தான் ட்விட்டரில், இந்தியாவுக்கு ஆகிச்ஜன் தேவை எனும் ஹேஷ்டேக்கே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்