இஸ்லாமாபாத்தில் இந்துக் கோவிலைக் கட்ட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் அழுத்தம் காரணமாக அந்த இடத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, கோவில் கட்டுமானத்திற்கு அரசு அனுமதித்துள்ளது.
தலைநகர் மேம்பாட்டு ஆணையம் லாகூரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமாபாத்தில் இந்து சமூகத்திற்கான தகன மைதானத்தின் எல்லைச் சுவரைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சில மதகுருமார்கள் இஸ்லாமாபாத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஜூலை மாதம், சட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்லை சுவற்றை கட்டுவதற்கான அனுமதியை மறுத்தது. மத விவகார துறை அமைச்சர் பிர் நூருல் ஹக் காத்ரி இந்த விஷயத்தை இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலுக்கு (அரசு நடத்தும் மதகுருமார்கள் கவுன்சில்) அனுப்பினார். ஆலோசனைக்காகவும், கட்டுமானத்திற்கு ரூ.1000 கோடி வழங்கும் திட்டத்தில் முடிவெடுக்கவும் இது இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டது.
பாரிஜாதம் மற்றுமொரு இந்துத்துவா குறியீடு; ஒரு தாவரத்தின் கவர்ச்சிக்கதை – எஸ்.நடேஷ்
மத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் இந்தக் கவுன்சில், அக்டோபரில், இஸ்லாமாபாத்திலும் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் கோயில் கட்டுவதற்கு அரசியலமைப்பு கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை என்று கூறியுள்ளது.
அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா
நாட்டின் பிற மதக் குழுக்களைப் போலவே இந்துக்களுக்கும் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப இறுதி சடங்குகளுக்கான இடத்தை அமைத்துக்கொள்ள அரசியலமைப்பு உரிமை உண்டு என்று கூறி 14 இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.