Aran Sei

’காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப அளிக்கப்படும் வரை, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை’ – பாகிஸ்தான் பிரதமர்

ம்மு-காஷ்மீரின் தன்னாட்சி அதிகாரத்தை திருப்பி தரும் வரை இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், டிஜிட்டல் மீடியாவின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஏதேனும் சாத்தியம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், “ஜம்மு-காஷ்மீரின் தன்னாட்சி அதிகாரத்தை திருப்பி தரும் வரையில், இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் சாத்தியமில்லை. பாகிஸ்தானை சீர்குலைக்க முயற்சிக்கும் நாடான இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் எங்களுக்கு விரோதம் இல்லை.” என்று கூறியுள்ளார்.

இந்து கோவிலை இடித்த அடிப்படைவாதிகள் : புனரமைக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

2016 ஆம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்களால், பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. யூரியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட அடுத்தடுத்த தாக்குதல்களால், விரிசல் மேலும் மோசமடைந்தது.

2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 26 ஆம் தேதி, புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது பயங்கரவாதில் நடத்திய தாக்குதலில்,  40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தானுக்குள் நுழைந்து, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களைத் தாக்கி அழித்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

`பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ – இது பாஜகவின் அரசியல் சதி

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்ததுடன், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்