Aran Sei

‘பெகசிஸ் விவகாரம் நாளுக்குநாள் பெரியதாகவும், அச்சுறுத்தலாகவும் வளர்கிறது’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ஸ்ரேலிய நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தனது பிரான்ஸ் பிரதிநிதியை சந்தித்து பெகசிஸ் விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளதாக செய்திகளுக்கு வெளியான நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் பெகசிஸ் குற்றச்சாட்டுகள் குறித்து அக்கறைக்கொண்டுள்ளபோது, இந்திய அரசு மட்டும் அதை பொருட்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது ஒவ்வொரு நாளும் பெரியதாகவும், அச்சுறுத்தலாகவும் வளர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேர்: கண்காணிக்கப்பட்டார்களா தமிழ் தேசியர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள்?

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்சின் குடியரசுத்தலைவர் மக்ரோனை சந்திக்க பிரான்சிற்கு செல்கிறார். ஏன்? பிரெஞ்சு உணவகத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்கு அல்ல! மன்னிப்பு கேட்க. பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பாதிப்பிற்குள்ளான குடியரசுத்தலைவர் மக்ரோனுடன் சமாதானம் செய்ய அவர் அங்கு செல்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

“பெகசிஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் பிரான்ஸ் அக்கறை கொண்டுள்ளது, இஸ்ரேல் அக்கறை கொண்டுள்ளது, மற்ற நாடுகளும் அக்கறைப்படுகின்றன. இந்திய அரசு மட்டுமே அக்கறைப்படவில்லை. இது விசித்திரமானதாக இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகசிஸ் ஸ்பைவேர் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த மேற்கு வங்க அரசு

இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் இந்த வாரம் பாரிஸில் தனது பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து, பெகசிஸ் ஸ்பைவேர் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்