Aran Sei

‘130 கோடி பேருடன் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது’ – தீவிரமடைந்து வரும் கொரோனா குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

2021 ஆம் ஆண்டு, 130 கோடி பேருடன்  ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றும் எங்களை காப்பாற்றுங்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றம் கட்டுவதை கைவிட்டு தடுப்பூசி கொள்முதல் செய்ய வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி

இன்று (மே 1), தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ட்வீட்டை மறுபகிர்வு செய்கிறேன். (அமைச்சரின் ட்வீட் கண்ணுக்கு தெரியாது) மே தினம்! மே தினம்! 2021 ஆம் ஆண்டு, 130 கோடி பேருடன்  ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள்! குறைந்த பட்சம் என்னை மட்டுமாவது காப்பாற்றுங்கள்!” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அதன் வழியாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்