Aran Sei

மத்திய அரசின் பாகுபாட்டை எதிர்த்து மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் – ப.சிதம்பரம் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசிகளை பல வகையான விலைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது, பிற்போக்குத்தனமானது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு அவற்றிடம் சரணடைந்துவிட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 23), அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்துள்ளார்.

அதில், “கொரோனா தடுப்பூசிகளை பல வகையான விலைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது மற்றும் பிற்போக்குத்தனமானது ஆகும். மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து இந்த முடிவைப் புறந்தள்ள வேண்டும். மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தைக் குழுவை உருவாக்குவதுதான் சிறந்த வழி.” என்று அவர் ஆலோசனையளித்துள்ளார்.

டெல்லி மருத்துமனையில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு – 2 மணிநேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக தகவல்

“இரண்டு மருந்து நிறுவனங்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைக் குழு ஆலோசித்து நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை வைக்க நிர்ணயிக்க வேண்டும். மருந்து நிறுவனங்களை ஒரே மாதிரியான விலைக்கு விற்பனை செய்ய அனைத்து மாநிலங்களும் தங்களின் வாங்கும் திறனால் பணிய வைக்க வேண்டும்.” என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநில அரசுகள்தான் இதை முன்னெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தன்னுடைய பொறுப்புகளில் இருந்து தவறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக அவற்றிடம் சரணடைந்துவிட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்