Aran Sei

”ஞாயிறன்று பதுக்குங்கள், திங்களன்று தடுப்பூசி செலுத்துங்கள்” – ஒரே நாளில் அதிகபட்ச தடுப்பூசி சாதனை குறித்து ப. சிதம்பரம்

credits : the indian express

ஞாயிறன்று பதுக்குதல், திங்களன்று தடுப்பூசி செலுத்துதல், செவ்வாயன்று மிண்டும் பழைய நிலைக்கே செல்லுதல்” இது தான் ஒரே நாளில் அதிக எண்ணிக்கை தடுப்பூசிக்கான சாதனையின் ரகசியம் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஞாயிறன்று பதுக்குங்கள், திங்களன்று தடுப்பூசி செலுத்துங்கள், செவ்வாயன்று மீண்டும் பழைய நிலைக்கே செல்லுங்கள். இது தான் ஒரே தடுப்பூசி சாதனைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த ‘சாதனை’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் என நம்புகிறேன். மோடி அரசுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட வழங்கப்படலாம். யாருக்கு தெரியும். ’மோடி ஹை, மும்கின் ஹை (மோடி இருந்தால், எல்லாம் சாத்தியம்) என்பதை இனி மோடி இருந்தால், எல்லாம் சாதனை என படிக்க வேண்டும்” என ப.சிதம்பரம் பதிவுட்டுள்ளார்.

திங்கள்கிழமை நாடு முழுவதும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமை இது 54.22 லட்சமாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் இலக்கை எட்ட, நாளொன்றுக்கு 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதை விநியோக நிலைமை கொண்டு இந்த இலக்கை எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்