Aran Sei

எல்லாமே மோடி என்றால் அமைச்சரவை மாற்றம் எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

credits : india today

பிரதமர் மோடியைப் பொருத்தவரை அவரே நிதியமைச்சர், அவரே பாதுகாப்புத்துறை அமைச்சர், அவரே வெளியுறவுத்துறை அமைச்சர், அவரே விளையாட்டுத்துறை அமைச்சர், அவரே எல்லாம். ஆகவே, யார் அமைச்சராக இருக்கிறார் என்பதே முக்கியமில்லாத ஒன்று என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 13), டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அமைச்சரவையில் நிதின் கட்கரிக்கு ( சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒன்றிய அமைச்சர்) மட்டுமே எப்போதாவது குரல் எழுப்ப தைரியம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் இப்போது நிசப்தமாகி விட்டார். அவர் தனது மௌனத்தை உடைத்து பேச வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ரூ.100-ஐ தொட்ட பெட்ரோல்: ‘கிரிக்கெட் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறை நீங்கிவிட்டது’ – ப.சிதம்பரம்

அண்மையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், “அனைத்து முடிவுகளும் பிரதமர் நரேந்திர மோடியால்தான் எடுக்கப்படுகின்றன என்பதை இந்த நாட்டில் உள்ள அனைவரும் அறிவர். ஆகவே, ‘அ’ நிதியமைச்சராக இருந்தால் என்ன அல்லது ‘ஆ’ நிதியமைச்சராக இருந்தால் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரதமர் மோடியைப் பொருத்தவரை அவரே நிதியமைச்சர், அவரே பாதுகாப்புத்துறை அமைச்சர், அவரே வெளியுறவுத்துறை அமைச்சர், அவரே விளையாட்டுத்துறை அமைச்சர், அவரே எல்லாம். ஆகவே, இந்த அமைச்சவை மாற்றம் என்பது ஏது பலனும் அளிக்காத ஒன்று.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஞாயிறன்று பதுக்குங்கள், திங்களன்று தடுப்பூசி செலுத்துங்கள்” – ஒரே நாளில் அதிகபட்ச தடுப்பூசி சாதனை குறித்து ப. சிதம்பரம்

அண்மையில், பணவீக்கம் குறித்த நிதின் கட்கரியின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலிளித்த அவர், “அதனால்தான் நான் அவருடைய பெயரைக் குறிப்பிட்டேன். ஆனால், அவர் அதிகம் பேச வேண்டும். முக்கியமாக, அவர் அமைச்சரவையில் இவை பற்றியெல்லாம் பேச வேண்டும். அவர் தனது மைக்கின் ஒலியளவை அதிகரிக்க வேண்டும். மற்றவர்கள் அவர்களின் மைக்கை இயக்க தொடங்க வேண்டும். அவர்கள் அனைவரும் இப்போது மௌனத்தில் இருக்கிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்