Aran Sei

காங்கிரஸ் தலைவர்கள் குறித்த பகுதிகளை பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக அரசு நீக்கிவிட்டது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காத்மா காந்தியைத் தவிர ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில், நேற்று (மே 6) நடந்த உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டத்தில் பேசியுள்ள ப.சிதம்பரம், “பெரும் பாரம்பரியமுடைய கட்சியான காங்கிரஸ் தற்போது உட்பரிசோதனைக்கு செல்கிறது. இது தீர்வுகளை தரும்” என்று  கூறியுள்ளார்.

‘கோட்சேவை ஆதரிக்கும் பாஜக, வெளிநாட்டு விருந்தினர் வந்தால் காந்தியின் ஆசிரமத்திற்கு கூட்டிப்போகிறது’ – சிவசேனா

“நம் நாட்டில் உள்ள 50 விழுக்காடு பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். ஜவஹர்லால் நேரு குறித்தோ இந்திரா காந்தி குறித்தோ கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. அவர்களெல்லாம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு பிறந்தவர்கள். அவர்களுக்கு எப்படி ராஜீவ் காந்தி குறித்தோ அல்லது இந்திரா காந்தி குறித்தோ தெரியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“முன்பு, சில பாடப்புத்தகங்களில் சில அத்தியாயங்கள் இவர்கள்(காங்கிரஸ் தலைவர்கள்) குறித்து இருந்தன. ஆனால், தற்போது இந்த அரசாங்கம் பாடப்புத்தகங்களில் இருந்து, இவர்கள் குறித்த அனைத்து அத்தியாயங்களையும் நீக்குகிறது. மகாத்மா காந்தி மட்டுமே எஞ்சியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு உட்பட அனைவரும் நீக்கப்பட்டு விட்டனர்” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

ராகுல் காந்தி போன இடம் இது தான் – சசிகாந்த் செந்தில் நேர்காணல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்