Aran Sei

அரசின் ரகசியம் அர்னாபுக்கு தெரிந்தது எப்படி? – ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

credits : dna india

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல், தற்போது கைது செய்யப்பட்டுள்ள, பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், அர்னாப் கோசமிக்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. காவல்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த உரையாடல்களின் முக்கிய பகுதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌரவ் பந்தி (@GauravPandhi) தனது டிவிட்டர் பக்கத்தில், அர்னாப் கோசமிக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் நடந்து உரையாடலின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோசாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

அதற்கு பிரதோ தாஸ், இந்தத் தேர்தல் சமயத்தில் அந்தப் பெரிய மனிதருக்கு (நரேந்திர மோடிக்கு) இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்றும் கூறுகிறார்.

அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதற்கு முன்னர் பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியதாக கூறியது. இந்த தாக்குதலின் போதுதான் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”ஒரு பத்திரிகையாளருக்கும் (அர்னாப் கோசாமி) அவருடைய நண்பருக்கும் (பிரதோ தாஸ்) பாலகோட்டில் நடந்த எதிர்தாக்குதலைப் பற்றி மூன்று நாட்களுக்கு முன்னரே அறிந்திருந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

மேலும் “அது உண்மை எனும் பட்சத்தில், அவர்களுக்கு தகவல் அளித்தவர்கள் பாகிஸ்தான் உளவாளிகள் உட்பட மற்ற நபர்களுக்கு இந்தச் செய்தியை பகிர்ந்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்றும் அவர் கேட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காவல்துறை : நெருக்கடியில் அர்னாப் கோஸ்வாமி

”உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய முடிவு, அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பத்திரிகையாளருக்கு தெரிந்தது எப்படி?” என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்

பாலாகோட் தாக்குதல் நடைபெற்று சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 303 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்