இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை பற்றி பேசுவது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்ல, நோபல் பரிசு பெற்றவர்கள் என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
அண்மையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஜே.பி.நட்டா எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும், பொய்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், கொரோனாவிற்கு எதிரான இப்போராட்டத்தில் வதந்திகளை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக, ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவருக்கு அர்த்தமற்ற கடிதங்களை ஜே.பி.நட்டா எழுதுவதற்கு பதிலாக, மே 6 2021 தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரையை படியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
कांग्रेस अध्यक्ष को एक आधारहीन पत्र लिखने के बजाय, भाजपा अध्यक्ष श्री नड्डा 6 मई, 2021 का न्यूयॉर्क टाइम्स का अतिथि कॉलम पढ़ सकते हैं।
लेखक कांग्रेस के सदस्य नहीं हैं।
उनके नाम श्री नड्डा को याद होंगे:
डॉ. अभिजीत बनर्जी और डॉ. एस्थर डुफ्लो, नोबेल पुरस्कार विजेता।— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2021
மேலும், “அக்கட்டுரையாளர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லை. ஜே.பி.நட்டாவிற்கு அவர்கள் பெயர் நன்கு நினைவிருக்கும். அவர்கள் டாக்டர். அபிஜித் பானர்ஜி மற்றும் டாக்டர். எஸ்தர் டுஃப்லோ. இருவரும் நோபல் பரிசு வெற்றவர்கள்.” என்று ப.சிதம்பரம் நினைவூட்டியுள்ளார்.
இருவரும் இணைந்து நியூயார்க் டைம்ஸ் இதழில் எழுதிய ‘இந்தியாவின் கொரோனா தொற்று பரவல் என்பது இப்போது உலகின் பிரச்சினை’ என்ற கட்டுரையை ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.