Aran Sei

‘பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டதா ஈபிஎஸ் – ஓபிஎஸ் கட்சி’ – ப.சிதம்பரம் கேள்வி

credits : india today

ந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 5), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.” என்று பெரியாரின் நினைவைப் போற்றியுள்ளார்.

தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் என்றும், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அன்பின் நீதிமான் அவர்களே, பெரியார் பேசுகிறார் – சத்யா

மேலும், “தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக, பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்