Aran Sei

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

credits : the indian express

ல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 10), ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “பெகசிஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே! எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 9), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், என்எஸ்ஒ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

https://www.aransei.com/?s=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்