Aran Sei

’தொலைநோக்கு திட்டமில்லாத மத்திய அரசு’ – ப.சிதம்பரம் விமர்சனம்

நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்பதையும் இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்பதையும் ஒன்றிய அரசு கணிக்கத் தவறியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 16), தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள தொடர்ச்சியான டிவீட்டுகளில், “அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை. நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்க மத்திய அரசு போடத் தவறியது.” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“இரண்டு, இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று கணிக்கத் தவறியது. இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்துத் தர மத்திய அரசு ஆர்டர் தந்த நாள் 11-01-2021. அவர்கள் தங்கள் முயற்சியில் தயாரித்திருந்த தடுப்பூசி இருப்பிலிருந்து தந்தார்கள். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த ஊக்கமும் தரத் தவறியது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

மேலும், “இரண்டு கம்பெனிகளுமே மானியமோ முதலீடோ கடனோ எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி சப்ளைக்கு மத்திய அரசு முன்பணம் (அட்வான்ஸ்) தந்ததே அன்றி வேறு பணம் தரத் தவறியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29-03-2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.” என்று ப.சிதம்பரம் தனது டிவீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மூன்றாவது, தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12-04-2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்