Aran Sei

தமிழ்நாட்டில் ரூ.100-ஐ தொட்ட பெட்ரோல்: ‘கிரிக்கெட் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறை நீங்கிவிட்டது’ – ப.சிதம்பரம்

ச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது, தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100-ஐ தாண்டியது ஏன் என்று இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 25), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள அவர், “உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை என்றும் இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

‘தொற்று காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பணம் பறிக்கும் பாரதிய ஜனகொள்ளை கட்சி ‘ – ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம்

மேலும், “இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள்தோறும் உறிஞ்சுகிறது. திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்.” என்று இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 31 காசு விலை உயர்ந்து, 99 ரூபாய் 19 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்