Aran Sei

ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் கடன் தள்ளுபடியா? – ப.சிதம்பரம் கேள்வி

மிழக அரசு வெற்றிநடை போடும் அரசல்ல, அது வெற்று நடைபோடும் அரசு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 28), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம் “அடுத்த அரசு நாங்கள் தான் என்று பழனிசாமி பீற்றிக்கொள்வது ஒரு போதும் நடக்காது. அமைச்சரவையைக் கூட கூட்டாமல், 110 விதியில் நகைக் கடனை ரத்து செய்தது விதிமீறல். பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் கடன்களை ரத்து செய்துள்ளது கோமாளித்தனம்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

தீஷா ரவி கைது : எதேச்சதிகார அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “அதிமுக அரசு வெற்றுப் பேச்சு அரசு. அதற்குப் பிண்ணனியில் குரல் கொடுப்பது மோடியும், அமித்ஷாவும் தான். பாஜக நச்சு இயக்கத்தை தமிழகத்தில் நுழைய தமிழகமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பெரும் கொள்ளை. ஆனால் கார்ப்ரேட்டு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி அளித்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகாவது மாணவர்களுக்குத் தேர்வு வைத்திருக்கலாம். மாணவர்களின் திறமையை பரிசோதிக்க தேர்வு அவசியம். அதனால் தேர்வை நடத்திவிட்டு அனைவருக்கும் தேர்ச்சி கொடுத்திருக்கலாம்.” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

“பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கிய பட்ஜெட்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்து பெசுகையில், “தேர்தலுக்காக வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் உள்ஒதுக்கீடு விவாதத்திற்கு உட்பட்டது. அதற்காகத் தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பணியை முடிக்காதநிலையில் உள்ஒதுக்கீட்டை அறிவித்துள்ளனர்.” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்