Aran Sei

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

காராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் வாயுக்கசிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாங்கர் லாரியிலிருந்து மருத்துமனையின் சேமிப்பு கிடங்கிற்கு நிரம்பும்போது வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதி புகைமூட்டமாக காணப்படும் காணொளி  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 80 நோயாளிகளில் ஆக்ஸிஜன் தேவைப்படும் 31 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது  உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் துபெ, “எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படும் டாங்கர்களிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்ததால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்” என கூறியுள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்