Aran Sei

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக முன்பே எச்சரிக்கப்பட்டது; மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை’ – சுப்பிரமணியன் சுவாமி

த்திய அரசு, ஆக்சிஜன் (தட்டுப்பாடு ஏற்படவில்லை) தேவையான அளவு இருக்கிறது என்பதை கூறுவதை விடுத்து, எந்தெந்த மருத்துவமனையில் எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்பதை கூற வேண்டும் என நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,68,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,25,604  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,18,959 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,417  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் டெல்லி, குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அளவுக்கதிகமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததால், பிணவறைகள் நிரம்பி வழியும் காட்சிகளை காண முடிகிறது.

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில், இந்தியாவின் சுகாதார கட்டமைப்பே சிதைந்து வருகிறது என்றும் மத்திய அரசு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை போக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தியா மூச்சு விட முடியாமல் திணறுகிறது என்றும் கூறியிருந்தனர்.

”குருமூர்த்தி ஒரு அரசியல் ஒட்டுண்ணி” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடும் தாக்கு

ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கி 15 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளதாக என்டிடிவியின் செய்தி கூறுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்சிஜன் தட்டுப்பாடு என சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

2ஜி-க்கு இணையான ஊழல் – தமிழக பாஜகவை பாதிக்கும்- சுப்பிரமணியன்சாமி கருத்து

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு, ஆக்சிஜன் (தட்டுப்பாடு ஏற்படவில்லை) தேவையான அளவு இருக்கிறது என்பதை கூறுவதை விடுத்து, எந்தெந்த மருத்துவமனையில் எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்பதை கூறுங்கள். கடந்த 2020 ஆம் ஆண்டே, ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பது குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்தது. ஆனால் மத்திய அரசு அதைக் கண்டுக்கொள்ளவில்லை” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்