Aran Sei

‘ஆக்சிஜன் இப்போது டெல்லியின் எமர்ஜென்சி’ – ஆக்சிஜன் வழங்கும்படி டெல்லி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

கொரோனா தீவிரமடைந்து வரும் இச்சூழலில், டெல்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் ஆக்சிஜன் டெல்லியில் இப்போது ஒரு எமர்ஜென்சியாகி விட்டது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (ஏப்ரல் 18), அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையை சமாளிக்க, டெல்லிக்கு வழக்கமாக தரப்படும் அளவை விட, அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

“இச்சூழலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கு மாறாக, எங்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இப்போது டெல்லியில் ஒரு எமர்ஜென்சியாகி விட்டது.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான ஆக்சிஜனை உடனடியாக வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்