Aran Sei

ஹரியானாவில் திருட்டுத்தனமாக ஆக்சிஜன் விற்ற நால்வர் கைது – ஒரு சிலிண்டர் ரூ 90,000 விற்கப்பட்டது விசாரணையில் அம்பலம்

ரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், திருட்டுத்தனமாகக் கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டரை விற்ற நால்வரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ – ரயில்வே துறை முடிவு

இதுகுறித்து தெரிவித்துள்ள சிறப்பு காவல்துறையினர் ,அந்த நால்வரும் 12,000- 14,000 விலை மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டரை 90,000 ரூபாய்க்கு திருட்டுத்தனமாக விற்று வந்துள்ளதால்   கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்த தெரிவித்த காவல்துறையினர், ஆக்சிஜன் தேவைப்படுவது போல போலியாகக் அவர்களை அழைத்து, அந்த நால்வரையும் கைதுசெய்தாகவும், அப்போது அவர்கள் 48 கி சிலிண்டரை ரூ.90,000 விற்று வந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு –  ஆக்சிஜன் கிடைத்தும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் நேர்ந்த அவலம்

இந்நிலையில் அவர்கள் இதற்கு முன்பே 10 சிலிண்டர்களை தலா 70,000 ரூபாய்க்கு விற்றது தெரிய வந்துள்ளதாகவும், மேலும் அவர்களிடமிருந்து  9 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தேவைக்கு நாங்கள் யாரிடம் பேச வேண்டும் – பிரதமரிடம் கேள்வி எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும், அவர்கள் இதுவரை எத்தனை சிலிண்டர்களை விற்றுள்ளனர், அவை எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதை கண்டறிய மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குர்கான் மாவட்ட காவல்துறையினர் கூறியுள்ளனர்.

source; THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்