Aran Sei

கொரோனாவை தடுப்பது குறித்து அரசின் கொள்கை முடிவு என்ன? – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

credits : pti

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன், முக்கிய மருந்துகள், கொரோனா தடுப்பூசி ஆகியவற்றின் இருப்பு குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆக்சிஜன், முக்கிய மருந்துகள், கொரோனா தடுப்பூசி ஆகியவற்றின் இருப்பு மற்றும் அரசின் கொள்கை முடிவு குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தப்பட்ட 40 பெண் கைதிகள்

மேலும், இந்த மனுவின் விசாரணையின்போது உயர்நீதிமன்றத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் இல்லையா?: விவசாய சங்கத்தினர் கேள்வி

கடந்த ஏப்ரல் 20 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 நகரங்களில் ஊரடங்கு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே மற்றும் நீதிபதி எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 23 இதுகுறித்து பதிலளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று – தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

இந்தியவெங்கும் 6 மாநில உயர்நீதி மன்றங்களில் மருத்துவ வசதிகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தன்னிச்சையாக இதை உச்சநீதிமன்றம்  விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்