Aran Sei

”ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் நோயாளிகள்” – உத்தரபிரதேச மருத்துவர்கள் தகவல்

த்தரபிரதேச அரசு ஆக்சிஜன் தட்டுபாடில்லை என்று அறிவித்த சமயத்தில் மீரட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் மொத்தமாக 7 பேர் ஆக்சிஜன் தட்டுபாட்டால் மரணமடைந்ததாக அம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் 3 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 4 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

இஇந்தச் சம்பவம்குறித்துதெரிவித்த ஆனந்த் மருத்துவமனையின் கண்காணிப்பாளர், கடந்த இரு நாட்களாகவே மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளார் என்று தி இந்து செய்தி கூறுகிறது.

மேலும்,” எங்களுக்கு ஒரு நாளைக்கு 400 சிலிண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்குத் தற்போது 90 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. அதிலும் தற்போது எங்களிடம் 4 சிலிண்டர் மட்டுமே இருப்பில் உள்ளது. ஆக்சிஜன் இல்லாத இரண்டு மணிநேர இடைவெளியில் நாங்கள் 3 நோயாளிகளை இழந்தோம்” என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இதே போன்று ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ள கே.எம்.சி மருத்துவமனை, மருத்துவர் சுனில்குப்தா, கொரோனாவினால் பாதிப்படைந்தவர்கள் உயிரிழப்பதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய காரணமாகும் என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்