Aran Sei

நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் மின்சார (திருத்த) மசோதா – எதிர்ப்பு தெரிவித்து மின்ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் உத்தேச மின்சார (திருத்த) மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடுபட அகில இந்திய மின் பொறியாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

ஜூலை 19 ஆம் தேதி தொடங்கவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில், ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் மின்சார (திருத்த) மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி,  ஒரு நாள் வேலை நிறுத்ததில் முழுவதும் உள்ள 15 லட்சம் மின்துறை  பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என அகில இந்திய மின் பொறியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் (ஏஐபிஇஎஃப்) சைலேந்திர துபே தெரிவித்தார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்த மசோதாவை அவசரப்படுத்தக் கூடாது  என்றும், பாராளுமன்ற எரிசக்தி நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக மின்சாரத்துறையின் முக்கிய பங்குதாரர்களான மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

துணை சபாநாயகர் கார் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் – 100 விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு முன் மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும் பட்சத்தில், முன்கூட்டியே போராட்டம் நடத்தப்படும் என சைலேந்திர துபே தெரிவித்தார்.

மின்சார சட்டம் 2003, உரிமை நீக்கத்தின் மூலம் மின் உற்பத்தியில் தனியாரை அனுமதித்ததை போல, முன்மொழியப்பட இருக்கும் மசோதா மின் விநியோகத்தில் தனியாரை அனுமதிக்க வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய வேண்டாம் – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

”இந்த சட்டம் வந்தால் தனியார் நிறுவனங்கள் நுகர்வோர்களைத் தேர்ந்தேடுத்து சேவை வழங்கவும், அதிக வருவாய் ஈட்டும் தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோர்களுக்கு முன்னுரிமை  வழங்கவும் விரும்புகின்றன. இது மாநில அரசுகளின் மின் பகிர்மான கழகங்களை திவால் ஆக்கிவிடும்” என அகில இந்திய மின் பொறியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  சைலேந்திர துபே குற்றம்சாட்டினார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்