Aran Sei

‘நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்றத்துடிக்கிறார் மோடி’ – ஒவைசி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியமைத்த பின் இந்த ஏழு ஆண்டுகளாக நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீம் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 9), உத்தரபிரதேசத்தில் தனது மூன்று நாள் பயணத்தில் பாரதபங்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு தொடங்கி, தலித்துகளும் இஸ்லாமியர்களும் வன்முறைகளுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் அருகே ஒரு கிராமத்தில், பசு வதை நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், முகமது அக்லக் என்ற இஸ்லாமியரை ஒரு கும்பலால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவத்தை ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.

மோடி பிரதமராக இருப்பதாலும், பாஜக அரசு அத்தகைய வன்முறைகளுக்கு உதவுவதாலும் இது போன்ற கொடூரங்கள் நடக்கின்றன. சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுகிறார்கள். ஆனால் சிறுபான்மையினர் மீதான இத்தகைய தாக்குதல்களின் போது மௌனமாக இருக்கிறார்கள்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மதச்சார்பின்மையை அழித்து, நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன என்று ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

மோடி அரசை விமர்சித்த பேராசிரியர் பணியிடை நீக்கம் – தேசவிரோத கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடம் எடுக்க வேண்டாம் என நிர்வாகம் சுற்றறிக்கை

ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் இந்தியக் குடியுரிமை சட்டமும் – ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு ஓவைசி பதிலடி

‘இருமுறை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி மக்களை கைவிட்ட மோடி’ – அசாதுதீன் ஓவைசி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்