Aran Sei

ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் இந்தியக் குடியுரிமை சட்டமும் – ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு ஓவைசி பதிலடி

Asaduddin-Owaisi-TW-1579431006

போரால் பாதிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களைத் தொடர்புப்படுத்தி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய ஒன்றிய அமைச்சருக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22), ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் காரணமாக அங்குள்ள இந்தியர்களை ஒன்றிய அரசு பாதுகாப்பாக அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம்  ஏன் வேண்டும் என்பதை விளக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் கடினமான கால கட்டத்தில் உள்ளனர். இதற்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம்   அவசியமாகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் டிவீட் செய்துள்ள ஓவைசி, “குடியுரிமை திருத்தச் சட்டமானது ஆவணமில்லாமல் வரும் புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமே பொருந்தும். இது 2014க்கு பிறகு வருபவர்களுக்குப் பொருந்தாது. தற்போது சரியான விசா வழியாக இந்தியாவுக்கு வரும் மக்களுக்கு இது எவ்வாறு உதவும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உங்கள் அரசு மிகத் துணிச்சலாக கொண்டுவந்த இச்சட்டத்தை நீங்கள் படிக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே திரித்து பேசுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த அகதிகளுக்கு உண்மையில் உதவக்கூடிய ஒரு மத-நடுநிலை சட்டத்தையே நான் கோரினேன். ஆனால், இதை மத வெறி பிடித்த ஒரு அரசு செய்யாது. அத்தகைய சட்டமானது இந்தச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, நம்முடைய நான்கு தூதரகங்களில் நம்முடன் பணியாற்றும் ஆப்கானிஸ்தானியர்களுக்கும் உதவியிருக்கும்.” என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்