கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலைக் கண்ணியதோடு நடத்தவேண்டுமெனக் கோரி தன்னார்வ தொண்டு அமைப்பொன்று உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த டிஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் காலெக்ட்டிவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இந்த மனுவில், “இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அவசர ஊர்தி சேவையினர் அதிக பணம் வசூலிப்பதால், ஏராளமான மக்கள் தங்கள் உறவினர்களின் உடலைக் கங்கையாற்றில் வீச நேர்ந்தது” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
கங்கையில் வீசப்படும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் : உ.பி மயானங்களில் இடமில்லாததால் நேரும் அவலம்
மேலும், அவசர ஊர்தி சேவையினர் மும்மடங்கு கட்டணம் விதித்தாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.
வழக்கறிஞர் ஜோஸ் ஆபிரஹாம் தாக்கல் செய்த இந்த மனுவில், இறந்தவர்களின் உடலைக் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் சிறப்பு சட்டம் அல்லது கொள்கைவகுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் அவசர ஊர்தி சேவைக்கும் முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தைப் பெற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஆணை பிறப்பித்து வழிகாட்டுதல்களை வழங்கவேண்டுமெனவும் அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கங்கையாற்றில் பிணங்கள் மிதந்தற்கு பின்னரே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மே 14 அன்று இறந்தவர்களின் உடலைக் கண்ணியமாக நடத்த வேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய உத்தரவையும் மேற்கோளாக காட்டியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.