Aran Sei

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

கோடை காலத்தில் கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், இது தொடர்பாக மாநில அமைச்சர்களுடன் மார்ச் 21 அன்று டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

மார்ச் 21 அன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டவுள்ளார்.

கோடைக்காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்களை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டங்களை நடத்துவதற்கான திட்டம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார் .

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர் ராவ் – ஜார்க்கண்ட் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை

அக்கூட்டத்திற்குப் பிறகு, சந்திரசேகர் ராவ் மற்றும் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு டெல்லிக்கு புறப்பட்டு சென்று, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பிரதமரையும்  சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவில் போராட்டம் நடத்துவதைப் போன்று, மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி கட்சியின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி: டெல்லி விரைந்த சந்திரசேகர் ராவ்

பஞ்சாபிலிருந்து 100 விழுக்காடு நெல்லை ஒன்றிய அரசு கொள்முதல் செய்கிறது என்று கூறியுள்ள சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் இருந்து 100 விழுக்காடு நெல்லை கொள்முதல் செய்ய கோரி இந்திய உணவு கழக அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்