உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஸ்ரீநகர் செல்ல உள்ள நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் 700 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனைத்து கைதுகளும் தெற்கு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி, இதில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களும் அடங்குவர் என தெரிவித்துள்ளார்.
பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு என்று தனித்துவமாக இருக்கும் பிஎஸ்ஏ விதியின்படி, ஒரு தனிநபரின் செயல் மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கைப் பேணுவதற்கு பாதகமாக இருந்தால், அவரை நிர்வாக உத்தரவின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்.
சனிக்கிழமை அக்.23 அமித் ஷா ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், மூன்று நாட்களாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அமித் ஷா ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சனிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்விலும், ஞாயிற்கிழமை பேரணியிலும் அமித் ஷா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.