Aran Sei

2013 -2018 வரை வேளாண்மைக் கடன் 57.7 விழுக்காடு அதிகரிப்பு – தேசியப் புள்ளியியல் அலுவலகம் ஆய்வில் தகவல்

டந்த 2013  ஆம் ஆண்டு முதல்  2018 வரை ஓவ்வொரு குடும்பத்திற்கான  வேளாண்மைக் கடன் 57.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம்  ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் உள்ள ஏறத்தாழ 5௦ விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், கடந்த  2013 ஆம் ஆண்டு சராசரியாக  47,000 மாக இருந்த ஒரு விவசாயக் குடும்பத்திற்கான நிலுவையுள்ள கடன் தொகை, 2018 ஆம் ஆண்டு 74,121 ரூபாயாக உயர்ந்துள்ளதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக ஆந்திராவில் 2.45 ரூபாயும், குறைந்தபட்சமாக நாகலாந்தில் 1,750 ரூபாயும் கடன் பெற்றுள்ளனர்.

இதில் நிலுவையுள்ள 69.6 விழுக்காடு கடன்கள் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் வழியாகவும் மீதமுள்ள 20.5 விழுக்காடு கடன்கள்  தொழில்முறை கடன் கொடுப்பவர்கள் வழியாகப் பெறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மொத்தக் கடனில் 57.5 விழுக்காடு கடன்கள் மட்டுமே  விவசாயத்திற்காக பெறப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்பட்ட தனது 77-வது சுற்று ஆய்வில், இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் இருக்கும் விவசாய குடும்பங்களின் வருவாய், நிலம் மற்றும் கால்நடைகள்குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Source: NSS REPORT NO. 587: Situation Assessment of Agricultural Households and Land and Livestock Holdings of Households in Rural India, 2019 (JANUARY – DECMEBER 2019)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்