Aran Sei

கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த 420 மருத்துவர்கள் – இந்திய மருத்துவர் கூட்டமைப்பு தகவல்

கொரோனா இரண்டாவது அலையில் நோய் தொற்று காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஎம்ஏ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

”நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டாவது அலையில் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்” என ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்