Aran Sei

நாளொன்றுக்கு குழந்தைகளுக்கு எதிராக 350 குற்றங்கள்- குழந்தைகள் உரிமைகள் அமைப்பு ஆய்வில் தகவல்

டந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 குற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது சராசரியாக நாளொன்றுக்கும் 350க்கு அதிகமான குற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும் சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (சிஆர்ஒய்) என்ற குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் வெளியிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாக சிஆர்ஒய் குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 13.3 விழுக்காடு அளவிற்கு குற்றங்கள் குறைந்திருப்பதாக சிஆர்ஒய் தெரிவித்துள்ளது.

துணை ஆய்வாளர் தேர்வில் கேட்கப்பட்ட பாஜக ஆதரவு கேள்விகள் – மன்னிப்பு கோரிய ஹரியானா பணியாளர் தேர்வாணய தலைவர்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 1,48, 185 ஆக இருந்துள்ளது. இதன் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 400க்கும் அதிகமான குற்றங்கள் நடைபெற்றுள்ளன என சிஆர்ஒய் கூறியுள்ளது.

”குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கடந்த ஒரு ஆண்டில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு, ஆன்லைன் குற்றங்கள் 400 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹரியானா துணை முதல்வர் நிகழ்ச்சியில் நுழைய முயன்ற விவசாயிகள் –  கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பிரங்கியை பயன்படுத்திய காவல்துறை

கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 2.2 விழுக்காடு குறைந்துள்ள போதிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 381 விழுக்காடு அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிப்பதாக சிஆர்ஒய் கூறியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சுமார் சரிபாதி குற்றங்கள் மத்தியபிரதேசம் (13.2%), உத்திரபிரதேசம் (11.8%), மகாராஷ்டிரா (11.1%), மேற்கு வங்கம் (7.9%), பீகார் (5.1%) ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறுகிறது என சிஆர்ஒய் தெரிவித்துள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

சிஆர்ஒய்-யின் கொள்கை ஆராய்ச்சி மற்றும் வழக்காடுதல் இயக்குநர் பிரித்தி மஹரா, “கொரோனா காலத்தில் பள்ளிக்கள் செயல்படாதது, தொற்றைக் கட்டுப்படுத்த நகர்வு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது, பொருளாதார மந்தநிலை, விளிம்புநிலை குடும்பங்களின் வீட்டு பொருளாதார மற்றும் உணவு பாதுகாப்பில் ஏற்பட்ட பாதிப்பு ஆகிய குற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன” என தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்