Aran Sei

கொரோனாவால் பெற்றோரை இழந்த 30,071 குழந்தைகள் – தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்

Image Credit : indianexpress.com

டந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தாண்டு ஜூன் 5 வரை, இரண்டு கொரோனா அலைகளின் காலத்தில் 3621 குழந்தைகள் அனாதையாகியுள்ளதாகவும் 26,176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 274 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

இந்த 30,071 குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது என்றும், இதில் 15,620 ஆண் குழந்தைகளும், 14,447 பெண் குழந்தைகளும்,4 மாற்றுபாலின குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் 8 முதல்13 வயது குழந்தைகள் 11,815 பேரும், 4-7 வயது குழந்தைகள் 5,107 பேரும் உள்ளதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கொரோனாவால் அனாதைகளான 577 குழந்தைகள் – ஒன்றிய அரசு தகவல்

மாநில வாரியாக மஹாராஷ்டிராவில் 7,084,உத்தரபிரதேசத்தில் 3,172 ,ராஜஸ்தானில் 2,482,ஹரியானாவில் 2,438, மத்தியப் பிரதேசம் 2,243 மற்றும் கேரளா 2,002 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கொரோனா தொற்றால் மட்டுமே இறக்கவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்