Aran Sei

அரசு மருத்துவமனையில் 1700 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு – வழக்குப் பதிந்த ஹரியானா காவல்துறை

Image Credits: Times Now

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டிருப்பதாக காவல்டுதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (ஏப்ரல் 21) இரவு சிவில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1,700 கோவிட்ஷீல்ட் மற்றும் 440 கோவாக்சின் டோஸ்கள் திருடப்பட்டிருப்பதாக, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி ராஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனம் – வைகோ குற்றச்சாட்டு

”மருந்து கிடங்கில் இருந்த மற்ற தடுப்பூசிகள், மருந்து மற்றும் பணம் ஆகியவற்றில்  அவர்கள் கைவைக்க வில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 22) காலை, மருந்துகள் வைக்கபட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை துப்புரவு பணியாளர் கண்டபோது சம்பவம்குறித்து தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுப்பது குறித்து அரசின் கொள்கை முடிவு என்ன? – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜிந்த் பகுதியில் போதிய தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

வியாழக்கிமை மதியம் இரண்டு தடுப்பூசிகளிலும் தலா ஆயிரம் டோஸ்களும், மாலைக்குள் கோவிட்ஷீல்டின் 6 ஆயிரம் டோஸ்களும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்நிலைய தலைமை அதிகாரி ராஜேந்தர் சிங் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்