Aran Sei

‘நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன’ – ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

Credit; The Hindu

நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்று ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலோக் நாகர் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்விக்கு நேற்று (ஏப்ரல் 1) அமைச்சர் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

அதில், “கடந்த 5 ஆண்டுகளில் (01.01.2017 முதல் 31.12.2021 வரை) மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையின் கீழ், நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து 1,600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிக்கு அனுப்பப்பட்டுள்ளனஎன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்துள்ளதா? இல்லையா?” என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்