Aran Sei

ஒன்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பரை நீக்க வேண்டும் – ஜீ நியூஸ் நிறுவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கடிதம்

ஜீ நியூஸின் துணை நிறுவனமான வியான் நியூஸில்  பணிபுரியும் இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பரை பணியில் இருந்து நீக்கக் கோரி சுமார் 150 ஊடகவியலாளர்கள் ஜீ நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எம்.ஜே. அக்பரை பணியில் சேர்த்து இருப்பது, ஊடகவியலாளர்களை அவமதிக்கும் செயல் என தெரிவித்துள்ளது.

சுமார் 150 ஊடகவியலாளர்கள் கையெழுத்திருக்கும் அந்தக் கடிதத்தை, எம்.ஜே. அக்பர் 1994 ஆம் ஆண்டு தொடங்கிய ஏசியன் ஏஜ் ஊடகத்தின் தற்போதைய ஆசிரியர் சுபர்னா ஷர்மா உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

”பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்காரரக்ளுக்கு இடமளிக்கக் கூடாது” என அறிக்கையில் குறிப்பிட்டுருக்கும் அவர்கள், எம்.ஜே. அக்பரை பணியில் சேர்த்திருப்பதன் மூலம், “ஊடவிலயாளர்களுக்கான பொறுப்பை” ஜீ நியூஸ் மற்றும் வியான் நியூஸ் மீறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

வியான் நியூஸ் நிறுவனத்தின் தலையங்க ஆலோசகராக, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.ஜே. அக்பர், கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் சேர்ந்திருப்பதாக எக்ஸ்சேஞ்ச் 4 மீடியா என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் மீடூ இயக்கத்தில், எம்.ஜே. அக்பர் மீது ஊடகவியலாளர் பிரியா ரமணி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து அவர் தனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரியா ரமணியின் புகாரைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பெண் ஊடகவியலாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம், எம்.ஜே. அக்பரை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இடை நீக்கம் செய்தது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்