Aran Sei

தனிநபர் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் – 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசம்

மைசூரில் தினக்கூலியான சையத் இஷாக் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு, தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டது.

ராஜீவ் நகரில் பகுதியில் அரசு நிலத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில், இஷாக்கால் உருவாக்கப்பட்ட நூலகத்தில் பொது அறிவுப் புத்தகங்கள், மத புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 11 ஆயிரம் புத்தகங்கள் இருததென என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகத்திற்கு அடிக்கடி வருகை புரிபவர்களில் ஒருவரான உருது நாளிதழின் பத்திரிக்கையாளர்  கைசர் சப்தர், ”உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில், தனது சொற்ப வருமானத்தில் 22 நாளிதழுகளுக்கு  இஷாக் சந்தா செலுத்தி வருகிறார்” எனத் தெரிவித்தாக தி இந்து கூறியுள்ளது.

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நூலகத்தை அமைத்திருக்கும் இஷாக், தினமும் நூலகத்தைச் சுத்தம் செய்வதோடு, பார்வையாளர்கள் பதிவேட்டையும் பராமரித்து வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

இது தொடர்பாக உதயகிரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள இஷாக், ”இது கன்னடத்தை எதிர்ப்பவர் செய்த வேலை. புத்தகங்கள் சேகரிப்பை அழிக்க அவர்கள் சதி செய்துள்ளனர்” என அவர் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து  தெரிவித்துள்ளது.

இஷாக் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக தெரிவித்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிரகாஷ் கவுடா, இஷாக்கின் செயல் ஒரு சிலரால் விரும்பப்படவில்லை என்றும், நூலகத்தை அழிக்க முயற்சிகள் நடந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைசூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத்தலைவர் முசாபர் அசாதி கூறுகையில், மக்களிடம் அறிவைப் பரப்புவதற்காக சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைகளுக்காக அமைக்கப்பட்ட நூலகத்தை அழிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

“அறிவை அழிக்க முடியாது என்ற சமிக்ஞையைக் குற்றவாளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் நான் பணத்தை விடப் புத்தகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஏற்கனவே, அவரது வேண்டுகோளுக்குக் குர்கான், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பதில் கிடைத்துள்ளது” என அசாதி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மைசூருவில் உள்ள சிவில் உரிமைகள் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவும் சனிக்கிழமையன்று நூலகத்திற்கு வருகை தந்தனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்