Aran Sei

பணிநீக்கம் செய்யப்பட்ட அவுட்லுக் ஊடக குழுமத்தின் முதன்மை ஆசிரியர் – மோடி எதிர்ப்பு தான் காரணமா?

வுட்லுக் குழுமத்தின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்த ரூபென் பானர்ஜி, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதம் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பியஅன்றே அவரை நிர்வாகம் நீக்கியுள்ளது.

அவுட்லுக் நிர்வாகம் குறிப்பாக, தலைமை நிர்வாக அதிகாரி இந்திரனில் ராயுடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரூபென் பானர்ஜி நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வெளியான இதழ்களில் நாட்டில் கொரானாவை கையாண்ட விதம் மற்றும் நாட்டில் தீவிரவாத சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது என மோடியின் அரசுகுறித்து அவுட்லுக்கின் ஆங்கில வார இதழ் கடுமையாக விமர்சித்திருந்தது.

ரூபென் பானர்ஜிக்கு தெரிவிக்காமல் இந்திரனில் ராய், பணியில் ஆட்களை சேர்த்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதன்கிழமை, விடுப்பில் இருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதாக ஊழியர்களுக்குப் பானர்ஜி வாட்சப் மற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில், இந்திரானில் ராயிடம் இருந்து பானர்ஜிக்கு மின்னஞ்சல் அனுப்பபப்ட்டது. அதில், “அவுட்லுக் இந்தியா உடனான உங்களது ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பானர்ஜி பணி நீக்கம் செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாக இந்திரானில் ராய், “ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் இருந்து ஒரு மாதம் காலம் விடுப்பில் செல்ல இருப்பதாகவும், இந்தக் காலத்தில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். செப்டம்பர் 8 ஆம் தேதி அனுப்பிய மின்னஞ்சலில், இன்னும் குணமாகவில்லை என்பதால், விடுப்பை நீட்டிப்ப்பதாக (தேதி குறிப்பிடாமல்) தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்று காலை மீண்டும் பணிக்குத் திரும்புவதாக மின்னஞ்சல் அனுப்புயுள்ளீர்கள். செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய செய்தி இணையதளம் தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது, நீங்கள் விடுப்பில் சென்றது நிர்வாகத்திற்கு அழுத்ததை அதிகரித்தது.” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “ உங்களுடைய ஒழுங்கற்ற நடத்தை நிர்வாகத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என கருதுகிறேன். உங்களுடைய நடத்தை நிர்வாகத்தின் ஒழுங்கை மிகவும் சீர்குலைத்துள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்

பணி நீக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பானர்ஜி, “எனக்குப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. மூன்று தினங்களுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலில், நான் குணமடைந்து திரும்பியபிறகு, என்னை நேரில் சந்தித்து பேச விரும்புதாக தெரிவித்திருந்தார். இன்று நான் குணமடைந்து பணிக்குத் திரும்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். குணமடைந்த பிறகு பணிக்குத் திரும்புவது எப்போது ஒழுங்கற்ற செயலாக மாறியது” என கேள்வி எழுப்பியிருந்தார்.

Source : The Federal 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்