இந்திய அரசாங்கத்தை ஏழு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்தால் இந்திய மக்களிடம் தெரிவிக்கவும் என்ற வாசகத்தை அவுட்லுக் இந்தியா இதழ், தனது அடுத்த இதழின் அட்டை படத்தை வடிவமைத்துள்ளது.
இது தொடர்பாக அவுட்லுக் இந்தியா இதழின் முதன்மை ஆசிரியர் ரூபென் பானர்ஜி ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஏழு ஆண்டுகால தவிப்பு? அவுட்லுக் இந்தியா, ஏழு ஆண்டுகால மோடி அரசாங்கத்தை மதிப்பிடுகிறது.” என பதிவிட்டுள்ளார்.
The seven-year itch? Latest @Outlookindia evaluates [email protected], featuring articles by some of the best known voices: Pratap Bhanu Mehta @pbmehta , Shashi Tharoor @ShashiTharoor , @MahuaMoitra , Manoj K Jha @manojkjhadu , Vijay Chauthaiwale @vijai63. Out on the stands soon. pic.twitter.com/8mO4MhbCmQ
— Ruben Banerjee (@Rubenbanerjee) May 13, 2021
மேலும், “இந்த இதழில், பிரதாப் பானு மேத்தா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர், திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் கே ஜா, பாஜகவை சேர்ந்த விஜய் சவுத்வாலே ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது. விரைவில் இதழ் கடைகளில் கிடைக்கும்” என அவுட்லுக் இந்தியா இதழின் முதன்மை ஆசிரியர் ரூபென் பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.