ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மீது பதியப்பட்டிருக்கும் நான்காவது பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
என்சிபிசிஆர் அளித்திருந்த புகாரில், ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவேற்றப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் குற்றப் பிரிவின் உயரதிகாரி முன்பு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ட்விட்டர் இணையதளத்தில் லடாக், காஷ்மீர் பகுதிகளை தனிநாடுகளாக சித்ததிரித்த வரைபடத்தைப் பதிவிட்டதற்காக, உத்திரபிரததேசத்தை சேர்ந்த பஜ்ரங் தள் உறுப்பினர் அளித்த புகாரின் பெயரில் ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது முதல் தகவல் அறிக்கையை உத்திரபிரதேச காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்காததற்கு ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு காலக்கெடு விதித்திருப்பதோடு, அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.