உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி, “உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. நேற்று உக்ரைன் அதிகாரிகள் உதவியுடன் கார்கிவ் பகுதியில் இருந்து நிறைய இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளனர். பணயக் கைதிகளாக இந்திய மானவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக, இதுவரை எந்தவொரு தகவலும் வரவில்லை. மாணவர்களிடம் இருந்து இப்படியாக எந்த புகாரும் வரவில்லை. கார்கிவ் மற்றும் பிற நகரங்களில் இருந்து உக்ரைனின் மேற்கு பகுதிக்கு இந்திய மாணவர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர், “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பெருமளவில் உக்ரைன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெல்கிரேடுக்கு செல்லவிருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.
Source: The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.