Aran Sei

ஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – சுயத்தணிக்கை செய்ய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

டிடி தளங்கள் தங்களின் செயல்பாடுகள்குறித்து அரசிடம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஒடிடி தளங்களின் சுய ஒழுங்குமுறை குழுவில் அரசு நியமிக்கும் பிரதிநிதிகள் இடம்பெறமாட்டார்கள் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஓடிடி தளங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறியிருப்பதாக அச்செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

”ஓடிடி தளங்கள் தங்களின் சுயத்தகவல்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும்,  அரசின் தணிக்கை குழு ஓடிடி தளங்களின் ஒளிபரப்பை தணிக்கை செய்யாது என்றும், அவர்களாகவே சுயத்தணிக்கை செய்து வகைப்பிரித்து கொள்ள அரசின் விதிகள் கவனம் செலுத்துகின்றன” என அமைச்சர் அறிக்கையில் கூறியிருப்பதாக, தி இந்து  தெரிவித்துள்ளது.

ஓடிடி தளங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பாக எழுப்பப்படும் புகார்களைப் பயனுள்ள குறை தீர்க்கும் வழிமுறை ஒன்றை ஒடிடி தளங்கள்  உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு

”வதந்திகளை அகற்றும் சுய ஒழுங்குபடுத்துதல் குழுவில் எந்தவொரு உறுப்பினரும் அரசால் நியமிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுய ஒழுங்குமுறை குழுவால்  தீர்க்கப்படாத புகார்களைப் ஆராய  அரசு ஒரு துறை ரீதியான  குழுவை உருவாக்கும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருப்பதாக, தி இந்து கூறியுள்ளது.

ஓடிடி தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் – விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டம்

ஆல்ட் பாலாஜி, ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், ஜியோ, ஜீ 5, வியாகாம் 18, ஷெமரூ மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளங்களின்  பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர், அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஓடிடி தளங்கள் கொண்டுவரப்படுமென்று மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்